பெரம்பலூர்: பெரம்பலூர் எஸ்பி.,திரு.மணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பெரம்பலூர் மாவட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் விளம்பர பேனர் வைக்க வேண்டுமென்றால் நகராட்சி, பேரூராட்சி மற்றும் காவல்துறை அனுமதி பெற்று வைக்க வேண்டும்.
அவ்வாறு வைக்கும் போது உரிய நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியவர் இன் உத்தரவும் அந்த பேனரில் இடம் பெற வேண்டும். மேலும் உரிய காலத்தினை பேனரில் அச்சிட்டு அதன் கால முடிவில் அந்த பேனர் அகற்றப்படவேண்டும்.
மேற்படி விதிகளை மீறும் பேனர் உரிமையாளர், பேனர் வைத்த நிறுவனத்தினர் மீது தமிழ்நாடு திறந்த வெளி சிதைவு சட்டப்பிரிவு-4 ன் படியும், இந்திய தண்டனை சட்டப்படியும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.