பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வரும் பொது மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். உங்களுக்கு இணைய தளத்தில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாகவும், விழாக்கால சலுகை எனவும், இந்த சலுகை சில நாட்கள் மட்டுமே என்று வரும் போலியான குறுஞ்செய்தியினை நம்பி அவர்கள் கூறும் வழிமுறையை பின்பற்றி உங்களது வங்கி கணக்கு விபரம் மற்றும் கடவுச் சொற்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
அவர்கள் கூறுவது அனைத்தும் உண்மை இல்லை என்பதை உணர்ந்து செயல்படுங்கள். உங்களது பாதுகாப்பு உங்கள் கையில் இருப்பதை மறந்துவிடாதீர்கள்.இணைய தளத்தில் வளம் வரும் இணைய தள மோசடி கூட்டத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இணைய தளம் குறித்து ஏதேனும் புகார் தெரிவிக்க பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சைபர் கிரைம் காவல் நிலையத்தினை தொடர்புக் கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ச.மணி தெரிவித்துள்ளார்.