கடலூர் : தமிழ்நாடு ஊர்காவல்படை மற்றும் கடலோர காவல் குழுமம் பயிற்சி நிறைவு விழா கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. சக்திகணேசன் IPS அவர்கள் பங்கேற்று ஊர்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். பின்னர் பேசும்போது ஊர்காவல்படை மற்றும் கடலோர காவல் குழுமம் பயிற்சி முடித்த உங்களுக்கு வாழ்த்துக்கள். பயிற்சியில் அடிப்படை கவாத்து பயிற்சி, நீச்சல் பயிற்சி, மற்றும் மீட்புபணி பயிற்சிகள் உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இனி வருங்காலங்களில் ஊர்காவல் படை பணி முக்கியமானதாகும். பேரிடர் காலத்தில் உங்களுடைய பணி பொதுமக்களின் நன்மதிப்பினை பெரும் வகையில் பணியாற்ற வேண்டும். பணியின்போது ஒழுக்கம் மிக மிக முக்கியமானதாகும் என சிறப்புரையாற்றினார்.