கடலூர்: கடலூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.சக்திகணேசன் IPS அவர்களின் அறிவுரையின்பேரில் மாவட்டம் முழுவதும் பெண்களிடம் போஸ்கோ சட்டம், குழந்தை திருமணம் தடுப்பது,
பாலியல் தாக்குதல், செல்போனில் ஆபாச படங்கள் வந்தால் புகார் செய்வது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், சிறார்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது சம்பந்தமாகவும் பெண்களுக்கு எதிரான புகார்கள் தெரிவிக்க இலவச உதவி எண்கள்
1091, 188 மற்றும் சிறார்களுக்கு எதிரான புகார் தெரிவிக்க 1098 ஆகிய உதவி எண்ணில் புகார் தெரிவிப்பது சம்பந்தமாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். கொரொனா நோய் வராமல் தடுக்க
முககவசம் அணிவது குறித்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.