கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ அபிநவ் IPS அவர்களின் அறிவுரையின்படி, கடலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி K. சாந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி கடலூர் நகரில் திருட்டு குற்றங்களை தடுக்கும் பொருட்டு காவலர்கள் ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
கடலூர் மாவட்டத்தில் கொரோனோ நோயை கட்டுப்படுத்தும் பாதுகாப்பு பணியில் காவல்துறையுடன் இணைந்து 45 நாட்கள் சிறப்பாக பாதுகாப்பு பணியை மேற்கொண்ட
ஊர்க்காவல் படை அதிகாரிகள், ஊர்க்காவல் படையினருக்கு வடக்கு மண்டல தளபதி
திரு R. கேதார்நாதன் அவர்கள் தலைமையில் நினைவு பரிசு வழங்கி, சான்றிதழ் வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது .ஊர்காவல் படை வட்டார தளபதி டாக்டர் R.சுரேந்திரகுமார் ,
கடலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி K.சாந்தி, துணை வட்டார தளபதி திருமதி கலாவதி, கோட்டதளபதி G. ராஜேந்திரகண்ணன், ஊர்காவல்படை உதவி ஆய்வாளர் திரு J.அருணாச்சலம் ,ஊர்காவல் படைவீரர்கள் பங்கேற்றனர்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்