கடலுார்: விருத்தாசலம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு . மோகன் அவர்களின் தலைமையில் , காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மங்கலம்பேட்டை பகுதியை சேர்ந்த இந்து அமைப்பு நிர்வாகிகள் மற்றும் கிராம தலைவர்களை அழைத்து தமிழக அரசின் அரசாணை நிலை எண் 765 ல் வழிகாட்டுதலை பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கு அனுமதி இல்லை எனவும் ,
தனிநபர்கள் தங்களின் சொந்த இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கு எந்தவித தடையும் இல்லை என்றும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ளுமாறும் , மீறுபவர்களை சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுரை வழங்கினார்கள் .
பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சபியுல்லா , புதுப்பேட்டை காவல் ஆய்வாளர் திரு . நந்தகுமார் ஆகியோர் புதுபேட்டை காவல் நிலைய சரகம் விநாயகர் சிலை செய்யும் வையாபுரிபட்டினம் , ஏரிப்பாளையம் கேட் ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலை செய்பவர்களிடம் தமிழக அரசின் உத்தரவு நகல்களை வழங்கி அரசின் வழிகாட்டுதலை பின்பற்றுமாறு அறிவுரைகளை வழங்கினர் .
ரெட்டிச்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் ( பொறுப்பு ) திருமதி . மகேஷ்வரி உதவி ஆய்வாளர்கள் திரு . அய்யனார் , திருமதி . உத்ராம்மாள் தலைமையில் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் இந்து முன்னணி அமைப்பு நிர்வாகிகளை அழைத்து விநாயகர் சிலை சம்பந்தமாக தமிழ்நாடு அரசு கூறிய வழிமுறைகள் படி நடத்த வேண்டும்/
தெருக்களில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கும் ஒலிபெருக்கிகள் வைப்பதற்கும் அனுமதி இல்லை என்பதையும் , அரசு வழிகாட்டலை பின்பற்றுமாறு அறிவுரை வழங்கினர் .