இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் டாஸ்மாக் மூடப்பட்ட தால் மது பிரியர்கள் கவலையில் உள்ளனர். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் அருகே அத்தியூத்து கிராமத்தில்உள்ள டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.7.75 லட்சம் மதிப்புள்ள 4,926 மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டன. தேவிப்பட்டினம் போலீசார் விசாரணையில், அந்த டாஸ்மாக் கடை விற்பனையாளரே மற்றொருவருடன் கூட்டு சேர்ந்து கொள்ளையடித்தது தெரிய வந்தது. இதையடுத்து விற்பனையாளரான வாலாந்தரவையை சேர்ந்த பூசைத்துரை 40, ராமநாதபுரம் கொட்டகையை சேர்ந்த கோட்டைச்சாமி 44, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கடலாடி அருகே கள்ளச்சாராயம்?? எஸ்.பி நேரில் ஆய்வு
முதுகுளத்தூருக்கு பைக்கில் கஞ்சா கடத்தி வந்த 2 பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்று செயல்களில் ஈடுபட்டால் குண்டாஸ் சட்டம் பாயும் என காவல் கண்காணிப்பாளர் திரு.வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடலாடி அருகே பொதிகுளம் கிராமத்தில் சாராயம் காய்ச்சிய சதீஸ்குமார் (29) என்பவர் இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்