சென்னை :சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பூவிருந்தவல்லி காவல் சரகத்திற்கு உட்பட்ட காவலர் குடியிருப்பில், பொங்கல் விழா சிறப்பாக கொண்டப்பட்டது. நேற்று பூவிருந்தவல்லியில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் திரு.கே.என்.சுதர்சன் தலைமை வகித்தார். பூந்தமல்லி காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் என்.எஸ்.குமார், பூந்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் ஜெ.அமலரத்தினம், டி12 பூந்தமல்லி காவல் நிலையம், திருமதி.கே.ஜோதிலட்சுமி, காவல் ஆய்வாளர் பூந்தமல்லி அனைத்து காவல் நிலையம், பூந்தமல்லி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் திரு.கே.சுரேஷ், எஸ்.ஆனந்தகுமார் ஆகியோர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, காவலர்கள் குழந்தைகள் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர். ரங்கோலி, கயிறு இழுத்தல், இசை நாற்காலி, பை ரேஸ், தண்ணீர் நிரப்புதல், எலுமிச்சை கரண்டி ஓட்டபந்தயம், குழந்தைகளுக்கான ஓட்டப் பந்தயம், பந்துவிளையாட்டு போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. பொங்கல் விழாவில் பங்கேற்றவர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளை காவலர் குடும்பத்தினர் கண்டு களித்தனர். இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விடுமுறை இல்லை என்றாலும், கடமையுடன் தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கும் விதத்தில் பொங்கல் விழா அமோகமாக நடைப்பெற்றது.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்திகளுக்காக
சென்னையிலிருந்து
திரு.முகமது மூசா