இராமநாதபுரம்: ராமேஸ்வரம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த மஞ்சள் மூடைகள் சரக்கு வாகனத்தில் ஏற்றி வரப்படுவதாக ராமநாதபுரம் எஸ்பி கார்த்திக்கிற்கு தகவல் கிடைத்தது. எஸ்பி அறிவுறுத்தல் படி ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார்,
உச்சிப்புளி அருகே புதுமடம் இரட்டை பூரணி சந்திப்பில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் போலீசாரை கண்டதும், வாகனத்தை நிறுத்தி விட்டு 3 பேர் தப்பி ஓடினர். வாகனத்தில் தலா 50 கிலோ எடையில் 24 மூடைகளில் சமையல் மஞ்சள் இருந்தது தெரிந்தது. வாகனம், மஞ்சள் மூடைகளை உச்சிப்புளி போலீசார் ஸ்டேஷன் கொண்டு வந்தனர். இது தொடர்பாக உச்சிப்புளி காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் ராமமூர்த்தி வழக்கு பதிந்து இன்ஸ்பெக்டர் கணேசன் விசாரிக்கிறார்.