தஞ்சை : தஞ்சை மாவட்ட பகுதிகளில் போதை பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்களை இனம் கண்டு அவர்களை மீது நடவடிக்கை எடுக்க தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு .ஆசிஷ் ராவத் ஐ.பி.எஸ், அவர்களின் உத்தரவுப்படி கும்பகோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.மகேஷ்குமார் , கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. அழகேசன் ஆகியோர் மேற்பார்வையில் கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சுபாஷ் அவர்கள் தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் செல்வகுமார், தலைமை காவலர்கள் பாலசுப்ரமணியம், நாடிமுத்து, செந்தில்குமார், ஜனார்த்தனன், ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கும்பகோணம் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார்கள்.
இந்நிலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான குட்காவை சிலர் காரில் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து கும்பகோணம் பாலக்கரை அருகில் நேற்று ( 06.06.2023 ) மதியம் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டார்கள். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை மேற்கொண்ட போது அதில் சுமார் 620 கிலோ குட்கா போதை பொருள் இருந்ததை தொடர்ந்து காரில் இருந்த கும்பகோணம் வினைதீர்த்தான் தெருவை சேர்ந்த தட்சணாமூர்த்தி மற்றும் அவரின் நண்பர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டார்கள், இதனை தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த இரு கார்கள் மூன்று இருசக்கர வாகனங்கள் மற்றும் விற்பனை செய்த பணம் ரூ.11,60,000/- ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி நபர்கள் மீது கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்