சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நான்கு வழிச்சாலை வழிவிடு முருகன் கோவில் அருகில் பறக்கும் படை தாசில்தார் மகாதேவன் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.அருள்ராஜ் காவலர்கள் திரு.ராஜேஷ் கண்ணன்,திரு.சங்கிலி பாண்டியன்,திரு.அருண் சோழன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது.
பார்த்திபனூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 27 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் 34 மூட்டை கோதுமைகளை கைப்பற்றினர்.ஹரிகிருஷ்ணன்(49) டிரைவர் லோடுமேன் போஸ் 45. ஆனந்த 21. ஆகியோரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி