கோவை: கேரள மாநிலம் மலப்புரம் பக்கமுள்ள முத்து வல்லூரை சேர்ந்தவர் முகம்மது சாஜி 46 இவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் மீன் மொத்த வியாபாரம் செய்து வருகிறார் .தற்போது பெரியநாயக்கன் பாளையம் பக்கமுள்ள கோட்டை பிரிவு பகுதியில் வசிக்கிறார். இவரிடம் கேரள மாநிலம் மலப் புரத்தை சேர்ந்த முகம்மது ஷபீக் ( வயது 28) என்பவர் கேரளாவில் நிலம் வாங்குவதற்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு ரூ 54 லட்சம் கொடுத்திருந்தார். முகமது சாஜி நிலமும் வாங்கி கொடுக்கவில்லை.. அந்தப்பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.
இந்த நிலையில் கொடுத்த பணத்தை கேட்க கடந்த 23ஆம் தேதி முகமது சபிக் அவரது உறவினர்கள் ஆரிப், ஜாவித் ,ஆனந்த், ஹரிஸ் பாபு, ஜின்னு பி ,அஜித், டன் தாமஸ் ஆகியோர் காரில் கோட்டை பிரிவிலுள்ள முகம்மது சாஜி வீட்டுக்கு வந்தனர். அவரிடம் பணம் கேட்டனர்.
அவர் கொடுக்க மறுத்தார் இதனால் ஆத்திரமடைந்த 8 பேரும் சேர்ந்து அவரை கத்தியால் குத்தி தாக்கி கடத்தி சென்றுவிட்டனர். பின்னர் ஒரு இடத்தில் இறக்கி விட்டு காரில் தப்பி விட்டனர்.
இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யபட்டது . இன்ஸ்பெக்டர் திரு. பால முரளி சுந்தரம் ( பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து முகமது சபிக் ( வயது 28) ஜாவித் (வயது 27)ஆனந்த் ( வயது 22) ஜின்னு பி அஜித் (வயது 21) ஆகியோரை கைது செய்தார். ஆரிப் ,ஹரிஷ் பாபு, டன் தாமஸ் ஆகியோரை தேடி வருகிறார்கள்.