வேலூர் : வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பவர் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மணிவண்ணன், அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரின் தலைமையிலான போலீசார் காட்பாடி பேருந்து நிலையத்தில் சோதனை செய்ததில் திருப்பதியில் இருந்து வேலூரை நோக்கி வந்த பேருந்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த குற்றவாளி தங்கபாண்டி (30) என்பவர் சட்டவிரோதமாக கடத்தி வந்த ரூபாய்.50,000 மதிப்புடைய 5 கிலோ எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்து குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்