தூத்துக்குடி : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் அவர்கள் மேற்பார்வையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுஜித் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. மாதவராஜா, மற்றும் கோவில்பட்டி உட்கோட்ட தனிப்படை போலீசார் (09.10.2022), கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி to சாத்தூர் மெயின்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி கூந்தன்குளம் பகுதியை சேர்ந்தவர்களான தங்கராஜ் மகன் முத்துக்கிருஷ்ணன் (19), லெட்சுமணன் மகன் கிருஷ்ணமூர்த்தி (27), மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் காரப்பட்டு பகுதியை சேர்ந்த காசி (எ) சக்திவேல் மகன் நாகராஜ் (26) ஆகிய 3 பேரும் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மதுபாட்டில்களை சரக்கு வாகனத்தில் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் குற்றவாளிகளான முத்துகிருஷ்ணன், நாகராஜ் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய் 3,06,000/- மதிப்புள்ள 25,680 புகையிலை பாக்கெட்டுகள், 48 மதுபாட்டில்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.