சென்னை: வடபழனி பகுதியில் காரை கடத்திச்சென்ற ஓட்டுநரை கைது செய்து , காரை பறிமுதல் செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னை, இராயப்பேட்டையைச் சேர்ந்த வாசுதேவன், வ/63, (Hot Chips உரிமையாளர்) என்பவர் வசித்து வருகிறார். வாசுதேவன் நேற்று முன்தினம் (11.12.2019) இரவு 9.30 மணியளவில் தன்னிடம் புதியதாக கார் ஓட்டுனர் வேலைக்கு சேர்ந்த கார்த்திக் (27), என்பவருடன் TN-06-U-4933 Hyundai I20 காரில் சென்று வடபழனி, Forum Mall முன்பு இறங்கிவிட்டு, கார் ஓட்டுனர் கார்த்திக்கிடம் பார்க்கிங் செய்துவிட்டு வருமாறு கூறியுள்ளார்.
ஆனால் வெகு நேரமாகியும் கார் ஓட்டுநர் கார்த்திக் வராததால் சந்தேகமடைந்த வாசுதேவன் இது குறித்து ஆர்-8 வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் கார்த்திக் எடுத்துச்சென்ற காரில் தனது ஆப்பிள் ஐ-போன் இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
R-8 வடபழனி குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.N.செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் விரைந்து செயல்பட்டு காரில் இருந்த வாசுதேவனின் I-Phone எண்ணை Track செய்து காரை பின் தொடர்ந்து சென்று நேற்று (12.12.2019) விடியற்காலை 1.00 மணியளவில் கல்பாக்கம், H.P. பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைத்திருந்த காரை கைப்பற்றி, கார் ஓட்டுனர் கார்த்திக்கை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.
காரை கடத்திச்சென்ற நபரை கைது செய்த R-8 வடபழனி குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.N.செந்தில்குமார், உதவி ஆய்வாளர்கள் திரு.R தினேஷ்குமார், திரு.R.பூபாலன், தலைமைக்காவலர் திரு.M.அசோக்குமார் (தா.கா.26233) மற்றும் முதல் நிலைக்காவலர் திரு.G.ஞானசேகர் (மு.நி.கா. 36349) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் நேற்று (12.12.2019) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்
வண்ணாரப்பேட்டை