மயிலாடுதுறை : காரைக்கால் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அதிக அளவில் சாராயம் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண சிங் இகாப அவர்கள் உத்தரவின்படி இரண்டு தனிப்படை அமைத்து தீவிர வாகன சோதனை மேற்கொண்டு நேற்று (12.08.21) காலை 06.00 மணியளவில் சீர்காழி புறவழிச்சாலையில் டாடா இண்டிகா காரில் கடத்தி வரப்பட்ட 225 லிட்டர் சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் நாகை மாவட்டத்தை சேர்ந்த குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.