திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின்படி தொடர்ந்து தீவிர வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நேற்று நடத்தப்பட்ட தீவிர வேட்டையில் கொரடாச்சேரி மற்றும் வைப்பூர் பகுதிகளில் சட்ட விரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட 9 நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 4-இருசக்கர வாகனங்கள் மற்றும் 2-லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கொரடாச்சேரி காவல் நிலைய பகுதியில் இருசக்கர வாகனத்தில் கூட்டாக மணல் திருடிய – 1.முரளிதாஸ் 42 . 2. சரண்ராஜ் 32, 3.செங்குட்டுவன் 42 4. தினேஷ் குமார் 32. 5. தினேஷ் குமார் 36. 6. அழகேசன் 39.
வைப்பூர் காவல் நிலைய பகுதியில் டிப்பர் லாரியில் வண்டல் மண் திருடிய – 1. பிரவின்ராஜ் 26. 2. ஜெயசுந்தர் 23 3. தினேஷ்குமார் 23., ஆகிய 9 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சிறப்பாக செயல்பட்டு மணல் திருடியவர்களை கைது செய்த பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி.காயத்ரி, கொரடாச்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.வைரமணி மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் M.Sc, (Agri)., அவர்கள் பாராட்டினார்கள்.
மேலும், இது போன்ற சட்ட விரோத மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் M.Sc, (Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.