திண்டுக்கல் மாவட்டம் நத்தம் -மதுரை நெடுஞ்சாலையில் வெளி மாநில மது பாட்டில்கள் கடத்திய வருவதாக மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு காவல் துறை துணை கண்காணிப்பாளன். முருகன் மேற்பார்வையில், ஆய்வாளர்.லாவண்யா, சார்பு ஆய்வாளர்.ஜெய்கணேஷ் அவரது தலைமையில் காவல்துறையினர் நத்தம் மூங்கில் பட்டி பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகிக்கும் வகையில் வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்த சென்னை ஆவடியில் காவலராக பணியாற்றும் முத்துக்குமார், நத்தம் லிங்கவாடியைச் சேர்ந்த அழகு பாண்டி, திருப்பத்தூரை சேர்ந்த சரத்குமார் ஆகிய 3 பேரை மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர். பிரதீப், மாவட்ட ஆட்சியர் பூங்கொடி பரிந்துரையில் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா