சேலம் : சேலம் மாவட்டம், ஊரக உட்கோட்டம் ஏற்காடு காவல் நிலைய எல்லை ஏற்காடு அடிவாரம் வன சோதனை சாவடியில் வனக்காப்பாளர் திரு.ஜெயக்குமார், அவர்கள் இரவு 11.30 மணியளவில் பணியில் இருந்தபோது சேலம் கோட்டாட்சியர் அவர்கள் சில்வர் ஹக் கடத்தி சென்ற லாரிகளை பிடித்து ஒப்படைத்து சென்றார் . அடுத்த நாள் (23.01.2012), ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் லாரியில் இருந்த ஓட்டுனர்கள் ஐயப்பன்,சத்தியமூர்த்தி, பெரியபையன், சபரிவேல், குமார், ரவீந்திரன், சந்திரசேகர், வெள்ளையன், வெங்டாச்சலம், பால சுப்பிரமணியன், வெங்கடேஷ், ஆறுமுகம், செல்வராஜ், சித்தைய கவுண்டர், சந்திரன், வேலு, ராமர், ஆகியோர் ஒன்றுசேர்ந்து அங்கு பணியில் இருந்த வன காவலரை கெட்ட வார்த்தையால் திட்டி மிரட்டி சோதனை சாவடி கேட்டை உடைத்து வாகனத்தை எடுத்து சென்றுவிட்டனர். இத சம்பந்தமாக புகார் அளித்த சட்டப்படி வழக்குபதிவு செய்து சேலம் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது அரசு வழக்கறிஞர் திரு. திரிசிரிபவன் அவர்கள் சிறப்பாக வாதாடி மேற்கண்ட 17 குற்றவாளிகள் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டு தலா ரூ.15,000 என மொத்தம் 2,25,000 அபராதம் விதித்து 2 வருடம் 7 மாத சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு அளித்தனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்