சென்னை : சென்னை மெரினாவில் பலூன் வியாபாரம் செய்து வந்த தம்பதியிடம் 7 மாத குழந்தையை தொலைக்காட்சி நாடக தொடரில் நடிக்க வைப்பதாக கூறி 12.01.2020ம் தேதி பெண் ஒருவர் குழந்தையை கடத்தி சென்றார்.
தம்பதிகள் காவல்துறையினரிடம் அளித்த புகாரை அடுத்து உதவி ஆணையாளர் திரு.லட்சுமணன் அவர்கள் தலைமையில் நான்கு தனிப்படைகள் தீவிர விசாரணையில ஈடுபட்டது. தனிப்படையினரின் தொடர் முயற்சியின் காரணமாக சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் எழும்பூரில் உள்ள பெண் மகப்பேறு மருத்துவமனையில் 20.01.2020ம் தேதி பெண் குழந்தையுடன் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து விரைந்த தனிப்படையினர் குழந்தையை கடத்திய பெண்ணை கைது செய்து குழந்தையை மீட்டனர்.
மேற்படி குழந்தையை கடத்திச் சென்ற பெண்மணியை கைது செய்த காவல் உதவி ஆணையாளர் திரு.எஸ்.லஷ்மணன், பூக்கடை மாவட்டம், காவல் ஆய்வாளர்கள் திரு.S.அகமது அப்துல் காதர், முத்தியால்பேட்டை காவல் நிலையம், திரு.M.சித்தார்த் சங்கர் ராய், பூக்கடை காவல் நிலையம், திருமதி.மோகனவள்ளி, மகளிர் காவல் நிலையம் (Harbour), காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.கண்ணன், C-1 பூக்கடை காவல் நிலையம், திரு.அம்பேத்கார், B-1 வடக்கு கடற்கரை காவல் நிலையம், திரு.சீனிவாசன், C-2 யானைகவுனி காவல் நிலையம், திரு.விஸ்வநாதன், C-2 யானைகவுனி காவல் நிலையம், திரு.ஆண்டலின் ரமேஷ், M-1 மாதவரம் காவல் நிலையம், திருமதி.தமிழ்செல்வி, B-3 கோட்டை காவல் நிலையம், திரு.பிரபாகரன், B-1 வடக்கு கடற்கரை காவல் நிலையம், தலைமைக்காவலர் திரு.முகமது யாஹியா (த.கா.18231), யானைகவுனி குற்றப்பிரிவு காவல் நிலையம், முதல்நிலைக்காவலர்கள் திரு.பிரபு (மு.நி.கா.32681), முத்தியால்பேட்டை காவல் நிலையம், திரு.பரசுராமன் (மு.நி.கா.28893), வடக்கு கடற்கரை குற்றப்பிரிவு காவல் நிலையம், திரு.முகமது (மு.நி.கா.43394), யானைகவுனி குற்றப்பிரிவு காவல் நிலையம், ஜெயந்தி, மு.நி.கா.28072), முத்தியால்பேட்டை காவல் நிலையம், திருமதி.ஜாஸ்மின், (மு,நி,கா 28072) வடக்கு கடற்கரை காவல் நிலையம், காவலர்கள் திரு.அறிவழகன் (கா.எண்.39846), முத்தியால்பேட்டை காவல் நிலையம், திரு.தினேஷ் (கா.எண்.29921), காவலர், ஆயுதப்படை மற்றும் திருமதி. ஜுலியட், (Senior Staff Nurse, IOC, Egmore) ஆகியோரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் 21.01.2020 அன்று நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
உடன், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் முனைவர் ஆர்.தினகரன்,இ.கா.ப., வடக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.கபில்குமார் சி.சரத்கர்,இ.கா.ப., பூக்கடை துணை ஆணையாளர் திரு.எஸ்.ராஜேந்திரன், இ.கா.ப., ஆகியோர் உடனிருந்தனர். இந்த வழக்கை துரிதமாக கண்டுபிடித்ததற்காக காவல் ஆணையாளர் அவர்கள் தனிப்படையினரை வெகுவாக பாராட்டினார்.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை