கோவை: கோவை மாவட்டத்தில் ஆனைமலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பழைய பேருந்து நிலைய பகுதியில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சங்கீதா என்பவர் பழைய துணிகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.
28.09.2021. தேதி இரவு ஆனைமலை பேருந்து நிலையத்தில் தனது 5 மாத குழந்தையுடன் பிச்சை எடுத்து வந்துள்ளார் அப்போது அடையாளம் தெரியாத நபர் அவருக்கு உணவு வாங்கித் தருவதாக 50 ரூபாய் பணம் தந்துள்ளார்.
இதனை நம்பி சங்கீதா தனது ஐந்து மாத குழந்தையை அவரிடம் விட்டு விட்டு அருகிலுள்ள உணவகத்திற்கு சென்று உள்ளார் சங்கீதா திரும்பி வந்து பார்த்தபோது அவரது ஐந்து மாத குழந்தையை அடையாளம் தெரியாத நபர் கடத்தி சென்றது தெரியவந்தது.
இது சம்பந்தமாக சங்கீத ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது இவ்வழக்கின் குற்றவாளி உடனே கண்டுபிடித்து குழந்தையை உடனடியாக மீட்பதற்கு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு. ஆர் சுதாகர் ஐ.பி.எஸ் உத்தரவிட்டார்.
கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் எம் எஸ் திரு.முத்துசாமி ஐ.பி.எஸ் அவர்கள் வழிகாட்டுதலின்படி கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.எஸ்.திருசெல்வ நாகரத்தினம் ஐ.பி.எஸ் அவர்களின் மேற்பார்வையில் வால்பாறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சீனிவாசன் அவர்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டிவி கேமராவை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் 20 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள சி.சி.டிவி கேமராவை ஆய்வு செய்து மங்கலம் குறிச்சி கிராமத்தில் குற்றவாளியை சுற்றி வளைத்துப் பிடித்து.
ஆனைமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் அதனடிப்படையில் ஆனைமலை காவல் ஆய்வாளர் திருமதி.கற்பகம் அவர்கள் குழந்தையை திருடி சென்ற குற்றவாளி ராமர் முருகேசன் மற்றும் முத்துப்பாண்டி ஆகிய மூவரையும் விசாரித்து ராமர் மற்றும் முருகேசன் ஆகிய இருவரும் குழந்தையை கடத்தி சென்று 90 ஆயிரம் பணத்திற்கு முத்துப்பாண்டி இடம் குழந்தையை விற்க முயன்ற தாய் கைது செய்யப்பட்டனர்.
குழந்தையை கைப்பற்றி குழந்தையின் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது குழந்தை பெற்றுக் கொண்ட தாய் கண்ணீர் மல்க காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தார் விரைந்து செயல்பட்ட கோவை தனிப்படை காவல்துறையினரை டி.ஐ.ஜி திரு.முத்துசாமி பாராட்டினார்.