காஞ்சி: ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம், சுங்குவார்சத்திரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சுங்குவார்சத்திரம், மொளச்சூர் கிராமம், கருமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அப்துல் ரகுமான் 28 என்பவர் சுங்குவார்சத்திரத்தில் “பிஸ்மில்லா டிராவல்ஸ்” நடத்தி வருகிறார்.
இந்த டிராவல்ஸில் சுங்குவார்சத்திரத்தைச் சேர்ந்த ஜீவா என்பவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். ஜீவாவின் தங்கையான திவ்யா என்பவருக்கும் கரசங்காலை சேர்ந்த கோபி ( எ ) கோபிநாத் 31 என்பவருக்கும் கடந்த 1.5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
திவ்யாவிற்கும், கோபிநாத்துக்கும் இடையே குடும்பத்தகராறு காரணமாக அவரது அண்ணன் ஜீவா 2 மாதங்களுக்கு முன்னர் திவ்யாவை அழைத்துவந்துவிட்டதால், 28.08.2021 அன்று 20.30 மணிக்கு கோபிநாத் மற்றும் அவரது நண்பர்கள் 1) ஜானகி ( எ ) ஜானகிராமன் 28 2 ) சுதாகரன் ( 28 ) மணிமங்கலம், 3 ) திவாகர் ( 27 ) த/பெ.நந்தன், கீழ்படப்பை மற்றும் 4 ) சத்யா 27 ), கரசங்கால் ஆகியோரை அழைத்துக்கொண்டு ஜீவா பணிபுரியும் கங்குவார்சத்திரத்தில் உள்ள பிஸ்மில்லா டிராவல்ஸ் சென்று அங்கிருந்த அப்துல் ரகுமான் 28 மற்றும் முகமது அன்சாரி 22 ஆகியோரிடம் ஜீவா மற்றும் திவ்யா எங்கே என கேட்டு இருவரையும் மிரட்டி அவர்கள் வந்த காரில் கடத்தி சென்றுள்ளனர்.
இது சம்மந்தமாக அப்துல் ரகுமானின் தாய் பர்கத்பீ என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட எதிரிகள் கைது செய்யப்பட்டு மற்றும் அவர்களிடமிருந்து அப்துல் ரகுமான் மற்றும் முகமது அன்சாரி ஆகியோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினர் காவல் ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி, உதவி ஆய்வாளர் திரு.தர்மலிங்கம் மற்றும் அவர்களின் குழுவினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர், அவர்கள் வெகுவாக பாராட்டினார் .