சிவகங்கை : சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.பார்த்திபன், மற்றும் அவரது தலைமையிலான காவல்துறையினர் (19.12.2022), அன்று முத்தனேந்தல் திரு.தா.கிருஷ்ணன் அவர்களின் நினைவிடம் அருகில் வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த TN20 AR 9999 INNOVA வாகனத்தை தணிக்கை செய்ததில் வாகனத்தில் 623.2 கிலோ புகையிலைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுனார் அம்பரீஷ் என்பவரை விசாரித்ததில் தான் கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கொண்டு வருவதாகவும் சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வருவதாக கூறியதன் பேரில், மேற்படி நபர் மீது U/s. 278, 328 IPC -ன் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இதுகுறித்து சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளார் முனைவர் த.செந்தில்குமார், அவர்கள் இதுபோன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் நபார்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, குண்டர் தடுப்புச் சட்டத்தின்படியும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி