கோவை : (12-8-2022)-ம் தேதி காலை 11 மணியளவில் கோயம்புத்தூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறை கண்காணிப்பாளர் திரு. பாலாஜி இ.கா.ப, மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணன் இ.கா.ப, அவர்கள் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் திருமதி. மேனகா அவர்கள் தலைமையில், உதவி ஆய்வாளர் திரு. அர்ஜுன் குமார் பரமேஸ்வரன் காவலர்கள் திரு.தட்சிணாமூர்த்தி, திரு. ஜெகநாதன் சரவணன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் கோவை மாவட்டம், சூலூர் வட்டம் பல்லடம் to செட்டிபாளையம் சாலையில் உள்ள செலக்கரைசல் பகுதியில் பொது விநியோகித்திட்ட ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்தல் தொடர்பான வாகன சோதனை மேற்கொண்டனர்.
சந்தேகத்திற்கு இடமான முறையில், அவ்வழியாக வந்த அசோக் லேலண்ட் lorry TN 46 R 8440 வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் சுமார் 25 ஆயிரம் கிலோ (25 ton)பொது விநியோகித்திட்ட ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்துவதற்காக கொண்டு செல்வது தெரிய வந்தது அதனை எடுத்து வந்த வாகனத்தின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் சிவகங்கை சேர்ந்த பாலமுருகன், என்பவரை கைது செய்தும்சிவகங்கை யிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற முத்துப்பாண்டி என்பவர் மீதும் கோயம்புத்தூர் குற்றப்பொருள் வளங்கள் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை cr no 204/22 படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
![](https://policenewsplus.in/wp-content/uploads/2021/06/gokul.png)