சென்னை: சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, K-6 T.P சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.E.ராஜேஸ்வரி தலைமையில், உதவி ஆய்வாளர் திரு.N.ராதாகிருஷ்ணன், தலைமைக் காவலர்கள் திரு.G.இளையராஜா (த.கா.24633), திரு.P.சரவணன் (த.கா.26945) மற்றும் முதல்நிலைக் காவலர் திரு.S.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினருக்கு கிடைத்த தகவலின் பேரில், காவல் குழுவினர் கடந்த 06.10.2021 அன்று காலை ஷெனாய் நகர், கல்லறைச்சாலை அருகே கண்காணித்த போது, அங்கு கஞ்சா மறைத்து வைத்திருந்த 1.எழில் (எ) ஏழிலரசன், 48, எம்.ஜி.ஆர் நகர், 2.ஈஸ்வரன், 61, தேனிமாவட்டம் 3.மாரிமுத்து, 48, அண்ணா நகர், 4.ரவி, 57, ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 7 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் மேற்படி குற்றவாளிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப.,அவர்கள் 11.10.2021 அன்று நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்