தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் மேற்பார்வையில் நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சுகாதேவி, உதவி ஆய்வாளர் திரு. ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ் மற்றும் தனிப்பிரிவு காவலர் திரு. மாரிக்கண்ணன் ஆகியோர் நேற்று 21.01.2023 ரோந்து பணியில் ஈடுபட்டபோது நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்திரம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் நாலாட்டின்புதூர் காலனி தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் பிரவீன் குமார் (23) நாலாட்டின்புதூர் சத்திரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்களான தங்கசாமி மகன் சின்னராஜ் (23) மற்றும் முத்துப்பாண்டி மகன் சிவகுமார் (24) ஆகியோர் என்பதும் அவர்கள் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் குற்றவாளிகளான பிரவீன் குமார், சின்னராஜ் மற்றும் சிவக்குமார் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த 45 கிராம் கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.