தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. கிங்ஸ்லி தேவ் ஆனந்த் மற்றும் உதவி ஆய்வாளர் திரு. ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி மந்திதோப்பு ரோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனங்களுடன் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கோவில்பட்டி மந்திதோப்பு ரோடு, ஸ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்த இருளப்பசாமி மகன் பொன் பிரகாஷ் (26) கோவில்பட்டி செக்கடி தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் ராகேஷ் சர்மா (26) மற்றும் கோவில்பட்டி, ராஜீவ்நகர் நுடீ காலனியை சேர்ந்த பாலமுருகன் மகன் விஷ்ணு (22) ஆகியோர் என்பதும் அவர்கள் சட்டவிரோத விற்பனைக்காக இருசக்கர வாகனங்களில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி தனிப்படை போலீசார் குற்றவாளிகளான பொன் பிரகாஷ், ராகேஷ் சர்மா மற்றும் விஷ்ணு ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா, ரொக்க பணம் ரூபாய் ஒரு லட்சம், ரூபாய் மதிப்புள்ள 1,40,000/- 4 பவுன் தங்கச் செயின் மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.