தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஆவுடையப்பன் மேற்பார்வையில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திருமதி. கனகாபாய், தலைமையிலான போலீசார் (15.01.2023), ரோந்து பணியில் ஈடுபட்டபோது, திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தேனி மாவட்டம் கொம்பன்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் மகன் மணிவாசகம் (30), மற்றும் தென்காசி மாவட்டம் மேல கடையநல்லூரை சேர்ந்த ராமையா மகன் ஐயப்பன் (40) என்பதும், அவர்கள் சட்ட விரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் குற்றவாளிகளான மணிவாசகம் மற்றும் ஐயப்பன் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 140 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.