தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ், அவர்கள் மேற்பார்வையில் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ரபி சுஜின் ஜோஸ் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.சிவராஜா, மற்றும் காவல்துறையினர், (24.08.2022) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தூத்துக்குடி பொன்னகரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் வைப்பார் பிஷர்மென் காலனி பகுதியைச் சேர்ந்த குண ரத்தினம் மகன் ராஜ் (44), மற்றும் மதுரை மாவட்டம் திருவாதவூர் பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி மகன் சுந்தரபாண்டி (24) ஆகியோர் என்பதும் அவர்கள் சட்டவிராத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி காவல்துறையினர், குற்றவாளிகள், ராஜ் மற்றும் சுந்தரபாண்டி ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 1 கிலோ 850 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய காவல்துறையினர், வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்