சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மானாமதுரை உட்கோட்டம், மானாமதுரை காவல் நிலைய சரகம், மேட்டுத்தெருவைச் சேர்ந்த கேசவ் குமார் என்பவரது வீட்டில் கடந்த (27.8.2023)ம் தேதி 1400 கிராம் கஞ்சாவானது பறிமுதல் செய்யய்பட்டு மானாமதுரை காவல் நிலையத்தில் மேற்படி நபர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. மேலும் மானாமதுரை உட்கோட்டம், திருப்புவனம் ஆபுசு நகர் மடப்புரம் விலக்கைச் சேர்ந்த கௌதமன் (23). என்பவரிடம் கடந்த (8.11.23)ம் தேதி பூவந்தி, மடப்புரம் கண்மாய்க்கரை அருகே 8 கிலோ கஞ்சாவானது பறிமுதல் செய்யய்பட்டு பூவந்தி காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. மேற்படி வழக்குகளில் தலைமறைவாக இருந்த நபர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பா.க.அரவிந்த் இ.கா.ப அவர்கள் தனிப்படையைச் சேர்ந்த காவல்துறையினர் நேற்று கைது செய்து கனம் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்யப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பா.க.அரவிந்த் இ.கா.ப அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி