தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் உத்தரவின்படி திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வசந்தராஜ் மேற்பார்வையில் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஷேக் அப்துல் காதர் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு. சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் இன்று (17.08.2024) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, ஆறுமுகநேரி கணியாளர் தெரு காட்டு பகுதியில் இருசக்கர வாகனங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் ஆறுமுகநேரி கணியாளர் தெருவை சேர்ந்த சக்திவேல் மகன் பாலமுருகன் (36), ஏரல் வாழவல்லான் பகுதியைச் சேர்ந்த ஜெயவீரபாண்டியன் மகன் மணிகண்டன் 31. மற்றும் முக்காணி மேலூர் பகுதியைச் சேர்ந்த வாழாவெட்டியான் மகன் பெரியநாயகம் 42. என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் குற்றவாளிகளான பாலமுருகன், மணிகண்டன் மற்றும் பெரியநாயகம் ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 4 கிலோ 500 கிராம் கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 செல்போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து, கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.