இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.குகனேஸ்வரன் தலைமையில் காவலர்கள் காட்டூரணி பகுதியில் ரோந்து செல்லும் போது அப்பகுதியில் காவலர்களைக் கண்டதும் ஓட முயன்ற இருவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் இருவரும் பட்டிணம்காத்தான் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் மற்றும் உதயபிரகாஷ் எனவும், இருவரும் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த சார்பு ஆய்வாளர் இருவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
மேலும் அவர்களிடமிருந்து சுமார் 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.