திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் திரு. கணேசன், அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, நாங்குநேரி, சங்கர் ரெட்டியார் மேல்நிலைப்பள்ளி அருகே நெடுங்குளத்தை சேர்ந்த வானுமாமலை என்ற வானு (21), தம்புபுரம், பாஸ்கர் தெருவை சேர்ந்த நவின், மறுகால்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற ராம்கி (21), லட்சுமணன் (19), ஆகியோர் சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்தவர்களை சோதனை செய்த போது, சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. மேற்படி உதவி ஆய்வாளர் அவர்கள் குற்றவாளிகளை காவல் நிலையம் அழைத்துவந்தார். இதுகுறித்து நாங்குநேரி காவல் ஆய்வாளர் திருமதி. செல்வி, அவர்கள் விசாரணை மேற்கொண்டு, வானுமாமலை என்ற வானு, ராமகிருஷ்ணன் என்ற ராம்கி, லட்சுமணன் ஆகிய மூன்று நபர்களை கைது செய்தார்.
மேலும் குற்றவாளிகளிடமிருந்து சட்டவிரோதமாக வைத்திருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை காவல்துறையினர், பறிமுதல் செய்தனர். மேலும், கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் திரு. ஆபிரகாம் ஜோசப், அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, கல்லிடைக்குறிச்சி, திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி அருகே கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சங்கர் (20), இசக்கிபாண்டி (20), இசக்கி துரை(22), சந்துரு (22), கார்த்திக் (31) ஆகிய ஐந்து நபர்களும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. மேற்படி உதவி ஆய்வாளர் அவர்கள் சங்கர், இசக்கிபாண்டி, இசக்கிதுரை, சந்துரு, கார்த்திக் ஆகிய 5 நபர்களை கைது செய்தார். மேலும் குற்றவாளிகளிடமிருந்து சட்டவிரோதமாக வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவை காவல்துறையினர், பறிமுதல் செய்தனர்.