தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் அவர்கள் மேற்பார்வையில் கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் திரு. விஜயகுமார் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சதீஷ்குமார், மற்றும் போலீசார் நேற்று (01.12.2022) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழங்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அழகநேரி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் மகேஷ் (22), கடையநல்லூர் வடமலாபுரம் பகுதியைச் சேர்ந்த அன்புக்கரசு மகன் சுரேஷ் (24), கழுகுமலை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சண்முகவேல் மகன் மரியராஜ் (58) மற்றும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஈச்சம் பொட்டல்புதூர் பகுதியைச் சேர்ந்த கோட்டூர்சாமி மகன் கோபிசன் (22), ஆகியோர் என்பதும் அவர்கள் சட்டவிரோத விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் குற்றவாளிகள் மகேஷ், சுரேஷ், மரியராஜ் மற்றும் கோபிசன் ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 100 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கழுகுமலை காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் சுரேஷ் மீது தென்காசி மாவட்டம் சின்ன கோவிலன்குளம் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், மரியராஜ் மீது தென்காசி மாவட்டம் சின்ன சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.