திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் திரு. பழனி, அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, நரியூத்து பருப்பு அருகே தூத்துக்குடி மாவட்டம், காசிலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வம் (23), ஜங்ஷன், தேவ் பிளாஸ் பகுதியைச் சேர்ந்த முத்து(20), தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த சுபாஷ்(18), மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகியோர் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்தவர்களை சோதனை செய்த போது சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
மேற்படி உதவி ஆய்வாளர் அவர்கள் நான்கு நபரையும் காவல் நிலையம் அழைத்து வந்தார். இது குறித்து மானூர் காவல் ஆய்வாளர் திரு. சபாபதி, அவர்கள் விசாரணை மேற்கொண்டு மாரிசெல்வம், முத்து, சுபாஷ் ஆகியோரை கைது செய்தும், இளஞ்சிறாரை கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்துள்ளனர். மேலும் எதிரிகளிடமிருந்து சட்டவிரோதமாக வைத்திருந்த 1 கிலோ கஞ்சாவையும், 2 இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.