திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி தென் மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் தனிப்படை காவல்துறையினர், வத்தலகுண்டு புறநகர் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வத்தலகுண்டைச் சேர்ந்த அஸ்வத் (22), என்பவரிடம் தேனி மாவட்டத்திலிருந்து அருண்குமார் (23), மற்றும் ஹரி கிருஷ்ணா (22), ஆகிய நபர்கள் கஞ்சா வாங்கும் பொழுது கையும் களவுமாக பிடித்து மூன்று நபர்களையும் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 01 கிலோ கஞ்சா, பணம் ரூ.11,000/- மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா