திருச்சி : திருச்சி மாவட்டம், ராம்ஜி நகர் பகுதியில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.சந்தோஷ் குமார் இ.கா.ப, அவர்களின் அறிவுரைப்படியும்,
திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.சரவணனசுந்தர் இ.கா.ப, அவர்களின் அறிவுரைபடியும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித் குமார் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி இன்று இரண்டாவது முறையாக ஜியபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பரவாசுதேவன், அவர்களின் தலைமையில் 50 காவல்துறையினர், தேடுதல் வேட்டை நடத்தினர் இதில் சுமார் 10 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.