கோவை: கோவை நகரில் அதிகரித்து வரும் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில் ஆர்.எஸ் புரம போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது வேளாண் பல்கலைக்கழக வாசலருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை சோதனை செய்தனர்.
அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரை கைது செய்தனர் மேலும் அவளிடம் இருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.