கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் போத்தனூர் போலீசார் நேற்று பொள்ளாச்சி ரோடு எல்.ஐ.சி காலனியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரிக்கையில் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் போத்தனூர் கணேசபுரத்தை சேர்ந்த ஹரிதாசை கைது செய்து 1.250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல சிங்காநல்லூர் போலீசார் நெசவாளர் காலனியில் நேற்று ரோந்து சென்றபோது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த சக்திவேல் (51), என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2.750 கிலோ கிராம் கஞ்சா ரொக்கம் ரூபாய் 790, பறிமுதல் செய்தனர். கோவையை அடுத்த காரமடை திம்பம் பாளையம் பஸ் நிறுத்தத்தில் கஞ்சா விற்றதாக உப்பிலி பாளையத்தைச் சேர்ந்த ரவி பிரசாத் (46), என்பவரை காரமடை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திரு.சேவியர்
மதுரை மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
மதுரை.