நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் , திட்டச்சேரியில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.சிவராமன், தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். திட்டச்சேரி சாலை தெருவை சேர்ந்த முஸ்தபா (32), என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர். அதில் அவரிடம் விற்பனைக்காக ஒரு கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். முஸ்தபா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்!