கிருஷ்ணகிரி: போலீசார் சப் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆர் ஜி நகர் பார்க் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டு இருந்த வாலிபரை பிடித்து சோதனை நடத்தினர்
அப்போது அந்த வாலிபரிடம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த நபரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிடிபட்ட நபர் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பிச்சைமணி என்கிற பரோட்டா மணி (21 )என்பது தெரிய வந்தது. பின்னர் அவனிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.