திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சிவகுமார் மற்றும் போலீசார் நேற்று இரவு பழைய பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் உடுமலை காரத்தொழுவு-வை சேர்ந்த பொன்ராஜ்(27) என்பது தெரியவந்தது பின்னர் அவர் வைத்திருந்த பையில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருந்ததை அறிந்த போலீசார் அவரிடமிருந்த கஞ்சா மற்றும் ரூபாய் 500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.பின்னர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.