கோவை: பார்த்திபன் நேற்று கணபதி பகுதியில் உள்ள ஒத்த புளியமரம் பகுதியில் தனது கூட்டாளிகளுடன் என்று கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். அப்போது சரவணம்பட்டி போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.
சந்தேகத்திற்கிடமான வகையில் பார்த்திபன் மற்றும் அவரது கூட்டாளிகள் நின்று கொண்டிருந்ததால் அவர்களை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர் .மேலும் பார்த்திபன் மற்றும் அவருடன் இருந்தவர்கள் விற்பனைக்காக கஞ்சாவை வைத்து இருந்ததும் அதை ஒரு சூட்கேசில் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர்.
அவர்களின் பிடியிலிருந்து பார்த்திபன் தப்பி ஓடினார். தப்பி ஓடிய பார்த்திபன் கணபதி தாசர் வீதி பகுதிக்குள் சென்று பதுங்கினார். அப்போது அங்கு இருந்த ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சபரி மற்றும் சிலர் பார்த்திபன் தங்களை தேடி இங்கு வந்து மீண்டும் பிரச்சனை செய்ய வந்திருப்பதாக நினைத்துக் கொண்டனர்.
.இதையடுத்து பார்த்திபனுக்கும் ராஜேசுக்கும் இடையே தகராறு எழுந்தது. தகராறு முற்றிய நிலையில் ராஜேஷ் ,சபரி மற்றும் உடன் இருந்தவர்கள் பார்த்திபனை கடுமையாகத் தாக்கத் தொடங்கினார்கள்.
மேலும் மறைத்து வைத்திருந்த கத்தியால் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த பார்த்திபன் ரத்த வெள்ளத்தில் அங்கு சரிந்தார். அருகிலிருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் அங்கு சென்று விசாரணை செய்தபோது ராஜேஷ் மற்றும் சபரி உள்ளிட்டோர் கத்தியால் குத்த பட்ட நபர் போலீசார் கஞ்சா விற்பனையின் போது சுற்றி வளைத்த போது தப்பிச்சென்ற பார்த்திபன் என்பது தெரியவந்தது.
மூவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 6 கிலோ கஞ்சா செல்போன்கள் மற்றும் சூட்கேஸ் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.