கோவை: சூலூர் பிரிவு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் பகுதியில் இளைஞர்கள் இருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவலின்பேரில் சூலூர் போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்பொழுது சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த இரு இளைஞர்களை பிடித்து விசாரிக்கையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.
தொடர்ந்து போலீசார் இருவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் கோவை சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்த பண்ணாரி என்பவரின் மகன் நிஸ்ஷாத்( 23) என்பதும் மற்றும் கோவை வீரபாண்டிபிரிவைச் சேர்ந்த திருமுருகன் என்பவரின் மகன் அரவிந்த் (23) என்பதும் இருவரும் காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
. இதனையடுத்து உடனடியாக இளைஞரை கைது செய்த சூலூர் போலீசார் அவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவிநாசி கிளை சிறையில் அடைத்தனர்.