கோவை : கோவையில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது. ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி பகுதியில் கஞ்சா விற்பதாக சிங்காநல்லூர் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சாதாரண உடையில் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு வாலிபர் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தார் . அதைக்கண்ட போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர். அதில் அவரிடம் இரண்டு கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மதுரையைச் சேர்ந்தவர் சக்திவேல் என்பது தெரியவந்தது .இதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோன்று போத்தனூர் போலீசாருக்கு எல் ஐ சி காலனி பகுதியில் கஞ்சா இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்த போது அவரிடம் ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சோதனை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ஹரிதாஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்