திண்டுக்கல்: திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் தும்மிச்சம்பட்டி வடக்குப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எஸ்.பி தனிப்படை போலீசார் அப்பகுதியில் ஜெயபால் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 250 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து ஜெயபால் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா