கோவை : கோவை உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங்யூனிட்டை சேர்ந்தவர் நவுசாத் (34). இவரை கஞ்சா விற்பனை செய்ததாக கடைவீதி போலீசார் கடந்த 8-ந் தேதி கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அப்போது அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டது. விசாரணையில் அவர் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி விற்பனை செய்ததும், இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைதுசெய்ய காவல் ஆணையர் திரு. சுமித் சரணுக்கு போலீஸ் அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து நவுசாத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவிட்டார்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்