திருவள்ளூர் : பொன்னேரி அடுத்த என்ஜிஓ நகரை சேர்ந்தவர் நாகராஜ்(29) இவர் பொன்னேரி பகுதிகளில் கல்லூரி பள்ளி மற்றும் ரயில் நிலையங்கள் அருகில் மறைவில் வைத்து இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக, பொன்னேரி காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்த தகவலின் பேரில் பொன்னேரி ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் மற்றும் போலீசார் சென்று பார்த்த போது கையில் கஞ்சா பொட்டலங்கள் உடன் விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர் கையிலிருந்த கஞ்சா ஒன்றரை கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணை செய்ததில் ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டு, பொன்னேரி பகுதியில் விற்பனை செய்வது தெரிய வந்தது. நாகராஜை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்