கோவை: கோவை காட்டூர் போலீசார் சப் இன்ஸ்பெக்டர் வெள்ளிராஜ் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆவாரம்பாளையம் சாலை ராமகிருஷ்ணா மருத்துவமனை பகுதியில் உள்ள காலியிடத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து சோதனை நடத்தினர்.
அப்போது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர், விசாரணையில் அந்த வாலிபர் அந்த நபர் அன்னூர் அடுத்த தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரின் மகன் மணிகண்டன்( 39) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்த ஒரு கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.