சென்னை: சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, J8 நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த தகவலின்பேரில், காவல் குழுவினர் 20.06.2021 இன்று காலை நீலாங்கரை, ECR ரோட்டில் கண்காணித்தபோது, அங்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 1.யோகன் சேவியர், வ/26, நீலங்காரை 2.சந்தோஷ்குமார் வ/24, ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 900 கிராம் எடை கொண்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.